ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது : குளத்தில் குதித்த ரவுடியை பிடித்த போலீஸ்

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற பிரபல வசனத்துக்கு ஏற்றார் போல், நெல்லை மாவட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பிக்க குளத்தில் குதித்த ரவுடி ஒருவரை போலீசார், படகில் சென்று பிடித்து கைது செய்தனர்.
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது : குளத்தில் குதித்த ரவுடியை பிடித்த போலீஸ்
x
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற பிரபல வசனத்துக்கு ஏற்றார் போல், நெல்லை மாவட்டத்தில் போலீசாரிடமிருந்து தப்பிக்க குளத்தில் குதித்த ரவுடி ஒருவரை போலீசார், படகில் சென்று பிடித்து கைது செய்தனர்.

நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். பிரபல ரவுடியான இவர் மீது மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளும், இருபதிற்கும் மேற்பட்ட பிடிவாரண்ட்டுகளும் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் ரவுடி பாஸ்கர் முன்னீர்பள்ளம் பகுதியில் மறைந்து இருப்பதாக  வந்த  தகவலையடுத்து ஆய்வாளர் சீதாலட்சுமி தலைமையிலான  போலீசார் அவரை பிடிக்க சென்றனர். இந்த தகவலை முன்கூட்டியே அறிந்த பாஸ்கர், சுத்தமல்லி அருகே உள்ள குளத்தில் குதித்து பதுங்கிக் கொண்டார். 

இதையறிந்த சுத்தமல்லி காவல் நிலைய போலீசார், தீயணைப்பு துறை உதவியை நாடினர்.  அவர்கள் சிறிய  படகு  மூலம் ரவுடி பாஸ்கரை குளம் முழுவதும் தேடினர். ஒலிம்பிக்கில் சாதனை படைப்பது போன்று, குளத்தின் மையப் பகுதியில், தண்ணீரில் தம் கட்டியபடி ரவுடி பாஸ்ககர் மறைந்திருந்தது தெரிய வந்தது. போலீசார் பிடிக்க முயற்சித்தபோது, காவலர் ஒருவரின் கையை, பாஸ்கர் வெட்டி உள்ளார். இதில் காயமடைந்த காவலரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், ரவுடியை சுற்றி வளைக்க முயன்றனர். இதைக்கண்டு, தண்ணீரில் இருந்து, தப்ப முயன்ற ரவுடியை, போலீசாரும்,  நீந்தியவாறு சென்று பிடித்து, விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்