1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு ​​தொகுப்பு - நியாய விலைக்கடைகளில் இன்று விநியோகம்
பதிவு : ஜனவரி 09, 2020, 07:41 AM
ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு, இன்று முதல் நியாய விலைக் கடைகளில் வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு 1,000 ரூபாய் ரொக்கத்துடன் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக்கடைகளில்  வழங்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால், குடும்ப அட்டையில் பெயர் உள்ள நபர் ஒருவரின் ஆதார் அட்டை அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் 'பாஸ்வேர்டு' அடிப்படையில், 12ந் தேதி வரை இந்த பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றதை உறுதி செய்யும் வகையில், அந்தந்த நியாய விலைக்கடைகளில் உள்ள ஒப்புதல் படிவத்தில் பொதுமக்களின் கையெழுத்து பெறப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிற செய்திகள்

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை - 8 மாத குழந்தையை கடத்தி சென்ற மர்ம பெண்

சென்னையில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி 8 மாத குழந்தையை கடத்தி சென்ற மர்ம பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

3 views

"குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்கு புதிய செயலி" - ரவி, ஏ.டி.ஜி.பி.

பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க கூடுதலாக புதிய செயலியை விரைவில் யூனிசெப் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்க உள்ளதாக கூடுதல் காவல்துறை இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார்.

7 views

"94.71% பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

94 புள்ளி 71 சதவீத குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

11 views

போட்டி போட்டு சென்ற மினி பேருந்துகள் - விரட்டி பிடித்த போலீசார்

கும்பகோணம் அருகே மதுபோதையில் மினிபேருந்தை இயக்கிய ஓட்டுனரை போலீசார் விரட்டி பிடித்தனர்.

3 views

பொங்கல் பண்டிகை: மஞ்சள் செடி அறுவடை பணி தீவிரம் - உரிய விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அருகே மஞ்சள் செடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

14 views

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது ஏன்? - திமுக எம்பி. கனிமொழி விளக்கம்

வரலாற்றை அறிந்ததன் காரணமாகவே தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததாக திமுக எம்.பி, கனிமொழி தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.