விசாரணை கைதி மர்ம மரண விவகாரம் : காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக உத்தரவு

திருச்சியில் விசாரணை கைதி மர்ம மரணம் குறித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் ஆய்வாளருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
விசாரணை கைதி மர்ம மரண விவகாரம் : காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராக உத்தரவு
x
திருச்சியை சேர்ந்த முருகனை, கடந்த  14ஆம் தேதி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது முருகன் மர்மமான முறையில் இறந்தார். போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முருகனின் உறவினர்கள் போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து, திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் செந்தில்குமார், தலைமை காவலர்கள் நல்லேந்திரன், விஜயகுமார் ஆகியோரை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், விசாரணை கைதி மர்ம மரணம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மதன் நேரில் ஆஜராக வேண்டும் என மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்