தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் : குடிபோதையில் பொய் புகார் அளித்ததாக தகவல்

சென்னையில் தொழிலதிபர் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக குடிபோதையில் பொய் புகார் அளித்ததாக தெரியவந்ததை தொடர்ந்து கடத்தல் நாடகமாடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் : குடிபோதையில் பொய் புகார் அளித்ததாக தகவல்
x
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் முகேஷ். மதுரவாயல் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த முகேஷ், தன்னை பிரபல ரவுடி தில் பாண்டி உள்ளிட்டோர் காரில் கடத்தியதாகவும், தன்னுடைய கார், செல்போன், பணம் இவற்றை பறித்து சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தில் பாண்டி தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிரசாத் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், தில் பாண்டியும், புகார் அளித்த முகேஷூம் நெருங்கிய நண்பர்கள் என தெரிய வந்தது. காரில் இருவரும் மது அருந்திய படி வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் காரில் இருந்து இறங்கிய முகேஷ் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்ததாகவும் தெரியவந்தது. முகேஷூக்கு பல ரவுடிகளோடு தொடர்பு இருந்து வரும் நிலையில் அவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடத்தல் நாடகமாடிய முகேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்