பணகுடி: பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது

நெல்லை மாவட்டம் பணகுடியில் சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற ஆவரைகுளத்தை சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் ஆனந்தி என்பவரிடம் இருந்து 15 சவரன் நகையை ஹெல்மெட் கொள்ளையர்கள் வழிப்பறி செய்தனர்.
பணகுடி: பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது
x
நெல்லை மாவட்டம் பணகுடியில் சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற ஆவரைகுளத்தை சேர்ந்த எல்.ஐ.சி. முகவர்  ஆனந்தி என்பவரிடம் இருந்து 15 சவரன் நகையை   ஹெல்மெட் கொள்ளையர்கள் வழிப்பறி செய்தனர். இதுகுறித்து பணகுடி ஆய்வாளர் ஷாகுல் ஹமீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். வைராவி கிணற்றை சேர்ந்த அஜித்குமார் மற்றும் அவரின் கூட்டாளிகள் லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த மாரிச்செல்வம், மேலப்பாளையத்தை சேர்ந்த பட்டமுத்து, வீரகேரளம்புதூர் ராமராஜ் ஆகியோர் வழிப்பறி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 27 பவுன் தங்க நகை மற்றும்  இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்