பூங்கா சுவர் இடிந்து சிறுமி உயிரிழந்த விவகாரம் - இழப்பீடு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் உள்ள காந்தி பூங்கா சுவர் இடிந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காததைக் கண்டித்து குழந்தைகள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பூங்கா சுவர் இடிந்து சிறுமி உயிரிழந்த விவகாரம் - இழப்பீடு வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
புதுக்கோட்டையில் உள்ள காந்தி பூங்கா சுவர் இடிந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காததைக் கண்டித்து குழந்தைகள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கடந்த 2017 ஆம் ஆண்டு தந்தையுடன் பூங்காவுக்கு சென்ற 3 வயது குழந்தை எஸ்தர் அங்கு விளையாடிவிட்டு வீடு திரும்பும் நேரத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுமியின் உயிரிழப்புக்கு நகராட்சி நிர்வாகம் 5 லட்சம் ரூபாயும் வழக்கு செலவுக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டது. இதுவரை வழங்காததைக் கண்டித்து கையில் தராசு ஏந்தியும், பின்பக்கமாக நடந்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்