"பிரதமர் உரையை கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்" - ஸ்டாலின்

பிரதமர் மோடி உரையை கேட்பதற்காக மாணவர்கள் ஜனவரி 16-ம் தேதி பள்ளிக்கு வரவேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவ​ர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் உரையை கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் - ஸ்டாலின்
x
தமிழர் திருநாளாம் பொங்கல் கொண்டாட்டத்திற்கு இடையே  பள்ளிக்கு வந்து பிரதமர் உரையை மாணவர்கள் கேட்க வேண்டும் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார். 

பிரதமர் உரையைக் கேட்பதற்காக பள்ளிகளில் ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர்கள் மூலம் மின்சாரம் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை சுட்டிக்காட்டியுள்ள அவர்,  

பா.ஜ.க.வின் பிரச்சாரத்திற்காக அரசுப் பணத்தைச் செலவழிப்பதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே இந்த உத்தரவை பள்ளிக்கல்வித்துறை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், 

இல்லையெனில் திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளளார். 


Next Story

மேலும் செய்திகள்