ரயிலில் இருந்து விழுந்து இளைஞர் பலி : கொலையா? தற்கொலையா? என விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து விழுந்த ஆந்திர மாநில இளைஞர் உடல் சிதறி பலியானார்.
ரயிலில் இருந்து விழுந்து இளைஞர் பலி : கொலையா? தற்கொலையா? என விசாரணை
x
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து விழுந்த ஆந்திர மாநில இளைஞர் உடல் சிதறி பலியானார். கன்னியாகுமரியில் இருந்து ஜம்முதாவி விரைவு ரயிலில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த மதுசுதாகர் என்ற இளைஞர் முதல் வகுப்பில் பயணித்துள்ளார். வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவர் திடீரென கீழே விழுந்துள்ளார். இதில், ரயில் சக்கரத்தில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வந்து உடலின் பாகங்களை சேகரித்த வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தவறி விழுந்தாரா? தற்கொலை செய்தாரா? என போலீசார், விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்