தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது

ஈரோடு , திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று மதியம் லேசாக பெய்யத்தொடங்கிய மழை பின்னர் கன மழையாக மாறியது. 

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பல்லடம், அவினாசி, தாராபுரம், உடுமலை, காங்கேயம், உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.   பின்னர் மழை பெய்யத் தொடங்கியதால்  இருசக்கர வாகன ஓட்டிக்கள்  நனைந்தபடி சென்றனர். 

வேலூர் மாவட்டம் குடியாத்தத் தில் இன்று மதியம் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மிதமான  மழைபெய்தது இதனால்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வைகை அணை, ரெங்கசமுத்திரம், பிச்சம்பட்டி, சக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்