வேட்பாளர் தேர்வுக்காக மக்கள் நடத்திய தேர்தல் : எட்டு பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி வேட்பாளர் தேர்வுக்காக கிராம மக்கள் நடத்திய தேர்தல் தொடர்பாக, எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர் தேர்வுக்காக மக்கள் நடத்திய தேர்தல் : எட்டு பேர் மீது வழக்கு
x
அங்குள்ள சுமைதாங்கி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இந்த தேர்தல் நடந்தது. போட்டியிட விரும்பிய 4 பேருக்கு தனித்தனி சின்னங்கள் ஒதுக்கி, வாக்குச்சீட்டுகள் மூலம் கிராமமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். இது குறித்து அறிந்த கீழக்கரை வட்டாச்சியர் வீரராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சுமைதாங்கி கிராமத்திற்கு விரைந்தனர். வேட்பாளரை தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்து அங்கிருந்த சில்வர் பானை, வாக்குச்சீட்டுகள், முத்திரை உள்ளிட்டவைகளை கைப்பற்றினர். மேலும், இது தொடர்பாக வேட்புமனு தயாரித்துக் கொடுத்த அச்சக உரிமையாளர் ராஜா, ஊர்த் தலைவர் முருகேசன், கிராம உதவியாளர் முருகவேல் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்