போலீஸ் நிலையத்தில் ஆயுதங்களை கொள்ளை அடித்த வழக்கு : 11 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை

போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் நுழைந்து ஆயுதங்களை கொள்ளையடித்த வழக்கில் 11 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது
போலீஸ் நிலையத்தில் ஆயுதங்களை கொள்ளை அடித்த வழக்கு : 11 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை
x
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு வெடிகுண்டுகளுடன் நுழைந்த கும்பல் போலீஸ்காரர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு துப்பாக்கிகள், சீருடைகள்,  தோட்டாக்கள் மற்றும்  வாக்கி - டாக்கியை  கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக  சுந்தரம், வெங்கடேசன், ரவிச்சந்திரன், முருகையன், சுந்தரமூர்த்தி, ஜெயச்சந்திரன், சேகர், சரவணன், நாகராஜன், செங்குட்டுவன், ஜான் பீட்டர், உத்திரபதி, பொன்னிவளவன், நடராஜன், வீரையா உள்ளிட்ட 15 பேரை "க்யூ" பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி   சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது சுந்தரம், சரவணன், உத்திரபதி உயிரிழந்தனர். வீரையா என்பவர் அப்ரூவர் ஆகி விட்டார். விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஞ்சிய 11 பேருக்கும், தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.  



Next Story

மேலும் செய்திகள்