பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல் : 10 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் கைது

தேனி அருகே பேஸ்புக் காதலரை கொல்ல, காதலியின் உறவினர்கள் அனுப்பிய கூலிப்படை கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல் : 10 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் கைது
x
காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன ஊழியர் அசோக்குமாருக்கும், மலேசியாவை சேர்ந்த அருணாவுக்கும் பேஸ்புக்கில் காதல் மலர்ந்துள்ளது. காதலியை நேரில் பார்த்த அசோக்குமார், திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த அருணா, மலேசியாவுக்கு சென்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த அருணாவின் உறவினர்கள், அசோக்குமாரை கொல்ல, கூலிப்படையை அனுப்பியுள்ளனர். தனியார் விடுதியில் தங்கியிருந்த, கூலிப்படை கும்பலின் நடவடிக்கையில் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், போடி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்த காவல்துறை, 10 பேர் கொண்ட கூலிப்படை கும்பலை கைது செய்து, இளைஞரை கொல்லும் சதியை முறியடித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்