

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள இடதுசாரி வாக்காளர்களை கவரும் வகையில், சில தனிப்பட்ட ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், இத்தகைய அமைப்புகளின் பின்னால் ரஷ்ய ஆதரவு அமைப்புகள் உள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் செய்திகளை எழுத அந்த நிறுவனங்கள், ஒப்பந்த அடிப்படையில் செய்தியாளர்களை பணிக்கு அமர்த்தி உள்ளதும் தெரியவந்து உள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 13 பேஸ்புக் கணக்குகள் மற்றும் 2 இணையதள பக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட முடக்கப்பட்டு உள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.