Social Media Banned | வாட்ஸ்ஆப், இன்ஸ்டா, யூடியூப் உட்பட 26 Appsக்கு தடை ...அதிரடி காட்டிய அரசு
நேபாளத்தில் யூடியூப், மெட்டா உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை
யூடியூப், மெட்டா, எக்ஸ் உட்பட 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. நேபாளத்தில், சமூக வலைதளங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக பதிவு செய்யப்படாத நிறுவனங்கள், உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என நேபாள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த 28ஆம் தேதி, 7 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என கெடு விதித்திருந்தது. ஆனால், புதன்கிழமை இரவோடு கெடு முடிந்த நிலையில், எந்த நிறுவனமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, பதிவு செய்யப்படாத யூடியூப், மெட்டா, எக்ஸ் உட்பட 26 சமூக வலைதளங்களை தடை செய்யுமாறு, நேபாள தகவல் தொடர்பு ஆணையத்திற்கு நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story
