பேஸ்புக்கில் வெளிநாட்டு தோழியுடன் நட்பு - நைசாக பேசி ரூ.6.50 லட்சம் அபேஸ்..

x

Puducherry | Facebook | பேஸ்புக்கில் வெளிநாட்டு தோழியுடன் நட்பு - நைசாக பேசி ரூ.6.50 லட்சம் அபேஸ்.. புதுச்சேரியில் அதிர்ச்சி

புதுச்சேரியை சேர்ந்த நபரிடம், கனடா பெண் எனக் கூறி பேஸ்புக்கில் தோழியாக பழகிய நபர், 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த 46 வயதான ஒருவரிடம், கனடா பெண் என பேஸ்புக்கில் அறிமுகமாகிய ஒரு பெண், தோழியாக பழகி வந்துள்ளார். பின், அப்பெண்ணும், புதுச்சேரியை சேர்ந்த அந்த நபரும் ஒருவருக்கு ஒருவர் தங்களது போட்டோஸ் உள்ளிட்ட சுயவிபரங்களை பரிமாறிக் கொண்டனர். இதையடுத்து, கனடாவில் இருந்து விலையுயர்ந்த ஐபோன், வைர கற்களால் ஆன வாட்ச், தங்க நகைகள் உள்ளிட்டவையை அனுப்பி வைப்பதாக அவர் கூறி உள்ளார். இதை நம்பிய புதுச்சேரியை சேர்ந்தவர், கஸ்டம்ஸ் எனக் கூறி பேசியவர்கள் கூறிய படி, ஒரு அக்கவுண்ட்டிற்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அனுப்பினார். பின்பு, எந்த பார்சலும் வராததாலும், அப்பெண் தனது நட்பை துண்டித்ததாலும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்