சங்கமேஸ்வரர் கோயில் யானை வேதநாயகி உயிரிழப்பு - பக்தர்கள் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் யானை வேதநாயகி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.
சங்கமேஸ்வரர் கோயில் யானை வேதநாயகி உயிரிழப்பு - பக்தர்கள் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
x
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் யானை வேதநாயகி உடல்நலக் குறைவால்  உயிரிழந்தது. வேதநாயகி யானை கடந்தசில ஆண்டுகளாக நீரிழிவுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கால்களில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக, கடந்த 10 நாட்களாக உணவு அருந்த முடியாமல் அவதிப்பட்டு வந்தது. வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனை தொடர்ந்து, கோயில் நடை அடைக்கபட்டது. வேதநாயகியின் உடலுக்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி சொலுத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்