கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனை கொன்ற வழக்கு :கொலையாளிக்கு தூக்கு தண்டனை விதித்திருந்த உயர்நீதிமன்றம்

தேனி அருகே கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனை கொன்ற வழக்கில் கொலையாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனை கொன்ற வழக்கு :கொலையாளிக்கு தூக்கு தண்டனை விதித்திருந்த உயர்நீதிமன்றம்
x
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலர் ஆகியோரை கடந்த 2011ல் திவாகர் என்பவர் கொலை செய்தார். மேலும் மாணவியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்தார். இதுதொடர்பான வழக்கில் இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திவாகருக்கு, தேனி கீழமை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த நிலையில் அதனை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் உறுதி செய்தது. தண்டனையை ரத்து செய்யக் கோரி திவாகர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். 
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும், வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது. 


Next Story

மேலும் செய்திகள்