"கேள்வி கேட்டால், முதலமைச்சர் கோபப்படுகிறார்" - திமுக தலைவர் ஸ்டாலின்

சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லாமல், முதலமைச்சர் இருக்க முடியாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கேள்வி கேட்டால், முதலமைச்சர் கோபப்படுகிறார் - திமுக தலைவர் ஸ்டாலின்
x
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த  சுஜித்தை மீட்பதில், அதிமுக அரசு மெத்தனம் காட்டியது ஏன்? என கேள்வி கேட்டால், முதலமைச்சர் கோபப்படுவதாக கூறியுள்ளார். நாட்டுமக்கள் - நடுநிலையாளர்களின் மனங்களில் எழுந்திருக்கும்  கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். யார் மீதும் சினம் கொள்ளாமல், குளறுபடிகளுக்கு பதில் சொல்லுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். "அனைத்தும் பொய்" என்று, ஒரே போடாகப் போட்டுவிட்டு, கடந்து போக முயற்சி செய்யக்கூடாது என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்