நகைக்கடை கொள்ளை வழக்கு : குற்றவாளி கணேசனுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளியாக கருதப்படும் கணேசனை ஆறு நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தது நீதிமன்றம்.
நகைக்கடை கொள்ளை வழக்கு : குற்றவாளி கணேசனுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்
x
திருச்சி நகைக்கடை கொள்ளை உள்ளிட்ட இரு கொள்ளை வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கணேசனை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கணேசனின் சொந்த ஊரான மதுரை மேட்டுப்பட்டி கிராமத்தில் மலை அடிவாரத்தில், நகை புதைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்த ஒன்றரை கிலோ நகை மற்றும் சமயபுரம் வங்கியில் கொள்ளையடித்த ஒன்றரை கிலோ நகை என மொத்தம் 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கணேசனிடம், 2 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள, சுமார் 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் கணேசனை ஆஜர்படுத்திய போலீசார், மேலும், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த, நீதிபதி சிவகாம சுந்தரி, கணேசனை ஆறு நாள்  காவலில் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்