கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை - நெல், வாழை, கரும்பு பயிர்கள் சேதம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு பயிர்கள் சேதமடைந்தன.
கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை - நெல், வாழை, கரும்பு பயிர்கள் சேதம்
x
இரவு முழுவதும் பெய்த மழையால் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கீரிப்பள்ளம், தடப்பள்ளி வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த  வெள்ள நீர் அந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை,கரும்பு வயல்களில் பாய்ந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதேபோல் அங்குள்ள பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. நடவு முடிந்து ஒரு மாதமே ஆன நிலையில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்