செங்கல்பட்டில் தனியார் பேருந்து மீது 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்து

செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது 108 ஆம்புலன்ஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் மற்றும் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நோயாளி உயிரிழந்தனர்.
செங்கல்பட்டில் தனியார் பேருந்து மீது 108 ஆம்புலன்ஸ் மோதி விபத்து
x
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது  108 ஆம்புலன்ஸ் மோதி ஏற்பட்ட விபத்தில்  ஓட்டுநர் மற்றும் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நோயாளி உயிரிழந்தனர்.  கன்னியம்மாள் என்ற பெண்மணி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது ஆத்தூர் என்ற இடத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெயக்குமாரும் கன்னியம்மாளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை நிர்வாகிகள் முறையாக பராமரிக்காமல் இருப்பதே விபத்திற்கு காரணம் என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்