வீர தம்பதி வீட்டில் கொள்ளை முயற்சி வழக்கு - இருவரை கைது செய்தது தனிப்படை போலீஸ்

நெல்லை வீர தம்பதி வீட்டில் கொள்ளையர்கள் புகுந்த வழக்கில், 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
x
அங்குள்ள கல்யாணிபுரம் கிராமத்தில் வசித்து வரும் வயதான விவசாய தம்பதி சண்முகவேல்- செந்தாமரை வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களை விரட்டியடித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, வயதான தம்பதியின் துணிச்சலை பாராட்டி தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது. இந்த வழக்கு  தொடர்பாக தனிப்படை போலீசார், கடந்த 50 நாட்களுக்கு மேலாக 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கில், பாலமுருகன், பெருமாள் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை கீழக்கடை ரயில்நிலையத்தில் வைத்து கொள்ளையர்கள் பிடிபட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து 35 கிராம் தாலி செயின், 2 அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாலமுருகன், பெருமாள் ஆகிய இருவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்