காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் -ரூ. 350 கோடி ஊழல் என ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகக் காவல் துறைக்கு கேமிரா, சி.சி.டி.வி., டிஜிட்டெல் மொபைல் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அம்பலம் ஆகி உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் -ரூ. 350 கோடி ஊழல் என  ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தொழில்நுட்பப் பிரிவில்" உள்ள டெண்டர்களில் பெரும்பாலானவை  குறிப்பிட்ட கம்பெனிக்கு கொடுக்கப்படுவதாகவும் டிஜிட்டல் மொபைல் ரேடியோவிற்கான 16 மாவட்ட டெண்டர்களில்,  10 மாவட்ட டெண்டர்கள் அந்த கம்பெனிக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே இதுதொடர்பாக நியாயமாக விசாரித்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்