வீணாகும் காவிரி : தடுக்க ஸ்டாலின் கோரிக்கை

காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்காமல், நீர் சிக்கனம் பற்றி அறிய முதலமைச்சர் இஸ்ரேல் செல்ல தயாராகிவிட்டதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
வீணாகும் காவிரி : தடுக்க ஸ்டாலின் கோரிக்கை
x
காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்காமல், நீர் சிக்கனம் பற்றி அறிய முதலமைச்சர் இஸ்ரேல் செல்ல தயாராகிவிட்டதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொள்ளிடம் ஆற்றில் 20 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலப்பது பற்றி முதலமைச்சர் கவலைப்படாமல் இருப்பதாக விமர்சித்துள்ளார். நானும் ஒரு விவசாயி என்று  மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர், அவர்களுக்கு சாதகமான திட்டங்களை படுகுழியில் தள்ளுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். உள்ளூரில் நீரை வீணாக்கி விட்டு நீர் சிக்கனம் பற்றி அறிய, முதலமைச்சர் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள இருப்பது வேடிக்கையாக இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், டெல்டா விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்