வீர தம்பதி வீட்டில் நிகழ்ந்த முகமூடி கொள்ளை - 30 நாட்கள் ஆகியும் கொள்ளையர்கள் பிடிபடவில்லை

நெல்லை மாவட்டம் கடையம் வீர தம்பதிகள் வீட்டில் முகமூடி கொள்ளையர்கள் நகைகளை பறித்து சென்று 30 நாட்களாகியும், அவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
வீர தம்பதி வீட்டில் நிகழ்ந்த முகமூடி கொள்ளை - 30 நாட்கள் ஆகியும் கொள்ளையர்கள் பிடிபடவில்லை
x
வீட்டில் தனியாக இருந்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியிடம் முகமூடி கொள்ளையர்கள்  35 கிராம் நகையை பறித்து சென்றதாக கூறப்பட்டது. அவர்களை, தம்பதி இருவரும் துரத்தி அடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதோடு, தமிழக அரசின் விருதும் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 30 நாட்களாகியும், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதோடு,   தனிப்படை போலீசாரும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். எனினும், வழக்கில் முன்னேற்றம் இல்லாததால், கண்டு பிடிக்க முடியாத வழக்கு பட்டியலில் இதும் இடம் பெறுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவுகிறது.

Next Story

மேலும் செய்திகள்