துபாயில் முதலமைச்சருக்கு வரவேற்பு கொடுத்த துபாய் வாழ் தமிழர்கள்

துபாய் நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு தொழில் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
துபாயில் முதலமைச்சருக்கு வரவேற்பு கொடுத்த துபாய் வாழ் தமிழர்கள்
x
லண்டன் மற்றும் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துபாய் நாட்டுக்கு சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு துபாய் வாழ் தமிழர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அந்த நாட்டை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்களை சந்தித்த அவர், அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க பலரும் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்