சாதிய அடையாளம் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

2018 ஆம் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்கள் பயிற்சியின் போது தெரிந்த கொண்ட தகவல்களின் அடிப்படையில் அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதிய அடையாளம் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
x
2018 ஆம் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்கள் பயிற்சியின் போது தெரிந்த கொண்ட தகவல்களின் அடிப்படையில் அரசின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, தமிழகத்தில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்கள், குறியீடு கொண்ட கைப்பட்டைகளை அணிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி வண்ன கைப்பட்டைகளை சாதிகளுக்கு தகுந்த படி மாணவர்கள் அணிவதுடன், சாதியை வெளிப்படுத்தும் வகையில் வளையங்கள் மற்றும் நெற்றியில் பொட்டு வைப்பதும் நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அடையாளங்கள் விளையாட்டு வீரர் தேர்வு, உணவு இடைவேளை மற்றும் பள்ளி ஓய்வு நேரங்களில் ஒன்று கூடவும் இந்த நடைமுறை பயன்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மாணவர்களால் பின்பற்றப்படும் இந்த நடைமுறைக்கு, செல்வாக்குமிக்க சாதிய தலைவர்கள் மற்றும் சில ஆசிரியர்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும்,  இளம் இந்திய ஆட்சிப் பணி பயிற்சி அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இத்தகைய பள்ளிகளை அடையாளம் கண்டு  உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


சாதிய பாகுபாடு காட்டும் மாணவர்களை கண்டறிந்து, அதனை தடுக்கவும், அவ்வாறு செயல்படுவோர் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை தொடர்பாக என்.எஸ்.எஸ். இணை இயக்குநருக்கு  மின்னஞ்சல் மூலம் அறிக்கை அனுப்பவும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்