வேலூர் வாக்குச்சாவடியில் பரபரப்பு : திருடப்பட்ட கேமராவுக்கு பதில் புதிய சிசிடிவி கேமரா பொருத்தம்

வேலூரில் வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் கனிணிகளை மர்ம நபர் திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் வாக்குச்சாவடியில் பரபரப்பு : திருடப்பட்ட கேமராவுக்கு பதில் புதிய சிசிடிவி கேமரா பொருத்தம்
x
வேலூரில் வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் கனிணிகளை மர்ம நபர் திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 30வது  வாக்குச்சாவடி மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் பள்ளியில் இருந்த 11 கனிணிகளும் திருடப்பட்டன. இதுபற்றி கொண்டசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிநாதன் ஆகியோர் போலீஸில் புகார் அளித்தனர். இதனிடையே, திருடப்பட்ட சிசிடிவி கேமராவுக்கு பதிலாக புதிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்