"5 ஆண்டுகள் குடியிருந்தாலே பட்டா" - பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

அரசு நிலங்களில் ஐந்து ஆண்டுக்கு மேல் குடியிருந்தால் வருமான உச்சவரம்பை ஆராய்ந்து தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகள் குடியிருந்தாலே பட்டா - பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி
x
அரசு நிலங்களில் ஐந்து ஆண்டுக்கு மேல் குடியிருந்தால் வருமான உச்சவரம்பை ஆராய்ந்து தகுதி உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மாதவரம் உறுப்பினர் சுதர்சனம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சோழவரம், நெற்குன்றம், மேட்டு சூரப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள 15 வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

"கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு"

கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் பணி நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். நாகை தொகுதி உறுப்பினர் தமிமுன் அன்சாமி இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், புயல் பாதித்த இடங்களில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். அதேபோல், அரசின் ஒரு லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்துக்காக இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து நிலங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்