"தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடக் கூடாது" - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
x
தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில்  சென்னையில் தனியார் பள்ளிகள் மூடப்படுவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்த பிறகே பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாகவும், அதன்படி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது பள்ளியின் கடமை என்றும் தெரிவித்துள்ளார். தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது கண்டனத்திற்குரியது என கூறியுள்ள அவர், அவ்வாறு மூடும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்