ராஜபாளையம் : திமுக - அமமுக தொண்டர்களிடையே மோதல்
ராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக மற்றும் அமமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு பதற்றம் நிலவியது.
ராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக மற்றும் அமமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு பதற்றம் நிலவியது. தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், அமமுக வேட்பாளர் பொன்னுத்தாயியை ஆதரித்து, அக்கட்சியின் செய்திதொடர்பாளரான சி.ஆர்.சரஸ்வதி வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திமுக தொண்டர் செந்தில் என்பவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை மோசமடைவதை உணர்ந்த காவல்துறையினர், சி.ஆர்.சரஸ்வதியை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.
Next Story

