நாங்குநேரி : சுங்கக் கட்டணம் செலுத்தாத அரசு பேருந்து சிறைபிடிப்பு

நெல்லை நாங்குநேரி சுங்கசாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தாத அரசு பேருந்து சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாங்குநேரி : சுங்கக் கட்டணம் செலுத்தாத அரசு பேருந்து சிறைபிடிப்பு
x
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற அரசு பேருந்து, நாங்குநேரி சுங்கச்சாவடியை கடந்தபோது, கட்டணம் செலுத்துவதற்காக பேருந்தில் இருந்த பார் குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது அது ஸ்கேன் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடி பணியாளர்கள் சுங்க கட்டணத்தை ரொக்கமாக செலுத்தும்படி பேருந்து ஓட்டுனரிடம் கேட்டுள்ளனர். அதற்கு பேருந்து ஓட்டுனர்  மறுத்ததையடுத்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் அரசு பேருந்தை சிறைபிடித்தனர்.  இதனால் அவதிக்குள்ளான பயணிகள், பின்னர் வேறு ஒரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், சுங்கச்சாவடி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பேருந்து விடுவிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நட்நத இந்தப் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்