108 ஆம்புலன்ஸில் வேலை பார்த்த போலி மருத்துவர்
பதிவு : ஜனவரி 13, 2019, 02:34 PM
108 அவசரகால மருத்துவ சேவையில் மருத்துவர் என்று கூறி வேலைபார்த்தவர் மீது 108 மருத்துவ சேவை நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
108 மருத்துவ சேவை நிறுவனம் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளது. அதில் கடந்த 6 மாதமாக வேலூரை சேர்ந்த ரேச்சல் ஜெனிபர் என்பவர் 108 அவசர கால சிகிச்சை சேவைப் பிரிவில் வேலை பார்த்து வந்தார் எனவும் அவர் குறிப்பிட்ட மருத்துவ பதிவு எண்ணை ஆய்வு செய்த போது, அவர் மருத்துவர் இல்லை என தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 3 நாட்களாக அவரை தொடர்பு கொண்டபோது அவருடைய செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது எனவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. ரேச்சல் ஜெனிபர் 2015 ஆம் ஆண்டு ஆந்திராவில் உள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவம் முடித்ததாக கூறி 108 அவசர கால சிகிச்சை சேவையில் வேலையில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2291 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3708 views

பிற செய்திகள்

அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்

அசாமில் இருந்து 20 டன் டீ தூளுடன் பொள்ளாச்சிக்கு அனுப்பப்பட்ட லாரி மாயமானது.

6 views

போலீசாரிடம் சிக்கினார் ரவுடி பினு

பிரபல ரவுடி பினுவை, நேற்று இரவு சென்னை எழும்பூர் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

46 views

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

கல்விக்கடன் தள்ளுபடி, நீட் தேர்வுக்கு விலக்கு உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

75 views

பொள்ளாச்சி வன்கொடுமைக்கு கண்டனம் : தஞ்சை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து தஞ்சை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

13 views

சிறப்பு ஒலிம்பிக் போட்டி : இந்தியா அசத்தல்

அபுதாபியில் நடைபெற்று வரும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

4 views

வசந்த காலத்தை வரவேற்க தயாராகும் மலர்கள்

சீனாவில் தொடங்கவுள்ள வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, பல்வேறு வகையான மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கியுள்ளன.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.