டீ கடைக்கு தீ வைத்த மர்ம நபர் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மயிலாடுதுறை அருகே டீ கடைக்கு மர்ம நபர் தீ வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
டீ கடைக்கு தீ வைத்த மர்ம நபர் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
x
மயிலாடுதுறை அருகே டீ கடைக்கு மர்ம நபர் தீ வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. வடகரை கிராமத்தில் முசாகுதின் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் திடீர் தீ விபத்து  ஏற்பட்டது. கடையில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ பரவியதில் அருகே இருந்த  மூன்று கடைகளிலும் தீக்கு இரையாகின. இதில் 4 லட்ச ரூபாய மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளன.மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில்,  கடையின் அருகாமையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் கடைக்கு தீ வைப்பது பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்