உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பணி ஓய்வு : நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக குறைந்தது

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா பணி ஓய்வு பெற்றதையடுத்து காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா பணி ஓய்வு : நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக குறைந்தது
x
பணி ஓய்வு பெற்ற நீதிபதி விமலாவுக்கு, உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி விமலா, வழக்கறிஞர் தொழிலில் உலகமயமாக்கல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் அதற்கு தகுந்தபடி தயார்படுத்திக் கொள்ளும்படி வழக்கறிஞர்களை கேட்டுக் கொண்டார். கடந்த 2011ல் நியமிக்கப்பட்ட நீதிபதி விமலா, பணி ஓய்வு பெற்றதால், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 60 ஆக குறைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்