பழமையான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பழமையான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில்
x
108 வைணவ தலங்களில் ஒன்றான இந்தக் கோவிலின் முகப்பு, சீனா பாணி கட்டிட கலையை பிரதிபலிக்கிறது. இங்கு  கல்லிலும், மரத்திலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் கடந்த 2006-ம் ஆண்டு துவக்கப்பட்டு, ஆமை வேகத்தில் நடந்து வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள ஆகம விதிகளை நன்கு அறிந்த வல்லுநர் குழுவை அமைக்க உத்தரவிட கோரி, ஸ்ரீ அன்னபூரணி சேவை அறக்கட்டளை சா்ர்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், கோயிலின் பழமை மாறாமல் புதுப்பித்து, கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்