தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக செயல்படும் அரசு பள்ளி

திருவண்ணாமலை அருகேயுள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு பூ மற்றும் மூலிகை தோட்டம் அமைக்கும் பயிற்சிகளை அப்பள்ளி ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர்.
தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக செயல்படும் அரசு பள்ளி
x
திருவண்ணாமலை மாவட்டம் ராமசாணிகுப்பத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 185 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி உட்பட 5ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளி தூய்மைக்கான தமிழக அரசு விருது பெற்றுள்ளது. செம்பருத்தி, ரோஜா, வாடாமல்லி, டிசம்பர் பூ என 30 வகையான பூ வகைகள் மற்றும் கற்றாழை, கீழாநெல்லி ஆவாரம்பூ கறிவேப்பிலை, வல்லாரை போன்ற  மூலிகை செடி பண்ணையும், திராட்சை, சப்போட்டா,  மா, பலா , வாழை, நெல்லிக்காய், அத்தி, கொய்யா, மாதுளை உள்ளிட்ட வை அடங்கிய பழத்தோட்டமும் இந்த பள்ளியில் உள்ளது. இயற்கையை அழிவில் இருந்து பாதுகாக்க செயல் முறை பாடம் எடுப்பதால் குழந்தை பருவத்திலேயே மாணவ மாணவிகள் சுலபமாக பயின்று வருகின்றனர். இதனால் இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்