தடுப்பு காவல் சட்டம் குறித்த வழக்கு விவகாரம் - சென்னை உயர் நீதிமன்றம் யோசனை

குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்பு காவல் சட்டங்களின் கீழ் சிறையிலடைக்கப்படுவதை எதிர்த்த வழக்குகளில் ஆஜராக சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கலாமே என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தடுப்பு காவல் சட்டம் குறித்த வழக்கு விவகாரம் - சென்னை உயர் நீதிமன்றம் யோசனை
x
ரேசன் அரிசி கடத்தியதாக வேலூரைச் சேர்ந்த அமர்நாத் என்பவரை தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது மனைவி சவுஜன்யா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, மீண்டும் விசாரித்தது. விசாரணையின் முடிவில், குண்டர் சட்ட வழக்குகளில் கைதேர்ந்தவரை, அரசு சிறப்பு வழக்கறிஞராக  நியமிக்கலாமே என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். இதற்கு விளக்கமளித்த அரசு வழக்கறிஞர், நூறு சதவீதம் முழுமையான தடுப்பு காவல்  உத்தரவை அரசு பிறப்பித்தாலும், சாதாரண காரணங்களுக்காக அது ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தார். இதனையடுத்து அமர்நாத் மனைவி சவ்ஜன்யா தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்