4 ஆண்டு ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்பு - வரும் கல்வியாண்டு முதல் தொடக்கம்

ஒருங்கிணைந்த நான்காண்டு கல்வியில் படிப்பு வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வர உள்ளதாக கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி தெரிவித்துள்ளார்.
4 ஆண்டு ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்பு - வரும் கல்வியாண்டு முதல் தொடக்கம்
x
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக 8-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் விழுப்புரம் மாவட்டம் வி. மருதூர் ஆகிய  இடங்களில் பல்கலைக்கழகத்தின் சார்பில் இரு  புதிய கல்வியியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாகவும்,  டிசம்பர் 3-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும்  கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்