ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு
பதிவு : நவம்பர் 10, 2018, 01:33 PM
மாற்றம் : நவம்பர் 10, 2018, 01:36 PM
தமிழகம் முழுவதும் தொடர் விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் சுடலை கண்ணன் ஆகியோர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளனர். அதில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின்  விவரங்களை பெற்று அவர்களுடைய சான்றிதழ்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.மேலும், 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் விடுமுறையில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய பணியாளர்களின்  மற்றும் ஆசிரியர்கள் ஆகியவற்றின் விவரங்களை இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விடுமுறையில் இருப்பவர்கள், அதேபோன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பணி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள், அரசு விதிகளில் கூறப்பட்டிருப்பதால், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

260 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

5321 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2926 views

பிற செய்திகள்

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய அமைச்சர் : நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு முடித்து வைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

41 views

பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை : சி.சி.டி.வி. கேமிராவையும் கழற்றி சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

28 views

தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் - வைகோ

தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

6 views

தாம்பரம் அருகே ஐஸ்க்ரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு : கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரின் உருவம்

சென்னை பெருங்களத்தூர் அருகே உள்ள குண்டுமேடு பகுதியை சேர்ந்த ஜெபசிங் என்பவர் அதே பகுதியில் ஐஸ்க்ரீம் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

104 views

அரசு பேருந்து மோதி இரு காவலர்கள் படுகாயம் : கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில், 2 காவலர்கள் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

39 views

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 - 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு பள்ளிக்கல்வித்துறை நிர்ணயித்துள்ள கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது.

152 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.