மருந்துகடை நடத்தி ஆங்கில மருத்துவம் பார்த்த 3 பேர் கைது
பதிவு : நவம்பர் 10, 2018, 12:33 PM
அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவின் பேரில் வருவாய், சுகாதாரம் மற்றும் காவல் துறையினர் இணைந்து பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
ராயம்புரம், குழுமூர், மீன்சுருட்டி, காட்டாத்தூர், உட்கோட்டை, பிலாக்குறிச்சி உள்ளிட்ட 9 இடங்களில்  முறையான ஆவணங்கள் இல்லாமல் சிலர் மருந்து கடை நடத்தியதும், ஹோமியோபதி படித்த சிலர், ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சிறுகளத்தூரைச் சேர்ந்த பழனியாண்டி, மீன்சுருட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்,  சுப்பிரமணியன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.