குழந்தைகளை கடத்தும் காப்பகங்கள் மீது நடவடிக்கை - தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த்

குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் 2 ஆயிரத்து 500 காப்பகங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை கடத்தும் காப்பகங்கள் மீது நடவடிக்கை - தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த்
x
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நான்கு சதவீதம் குறைந்துள்ளதாக கூறினார். இந்தியா முழுவதும் அனுமதியின்றி 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருவதாகவும், இதன் மூலம் குழந்தைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  பதிவு செய்யாமல் காப்பகம் நடத்தி வருபவர்கள் குழந்தைகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அதிகபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆனந்த் தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்