அத்திபலகானூர் மாரியம்மன் கோவில் திருவிழா

ராசிபுரம் மற்றும் அத்திபலகானூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் சாட்டையடி வாங்கி நேர்த்திகடன் செலுத்தும் விநோத திருவிழா நடைபெற்றது.
அத்திபலகானூர் மாரியம்மன் கோவில் திருவிழா
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்யசுமங்கலி மாரியம்மன் கோவில் மற்றும்  அத்திபலகானுரில் உள்ள மாரியம்மன் கோவில்  திருவிழா கடந்த  10 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் துவங்கியது.  
இன்று காலை பூவோடு எடுத்து, கோவிலை சுற்றி வலம் வருதல் மற்றும் உருளை தண்டம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு நிகழ்வான பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தங்கள் வேண்டுதல் நிறைவேறவும், பெண்கள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டியும் பேய் பிடித்தல் காத்து கருப்பு நீங்கவும் தொழில் விருத்தி அடைய வேண்டியும் கோவில் பூசாரி கையில் உள்ள சாட்டையால் 3 அடி வாங்கி சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்