ஸ்டெர்லைட் ஆலையின் இறக்குமதி விபரத்தை தாக்கல் செய்ய கலால் துறைக்கு அதிரடி உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்களின் விபரத்தை தாக்கல் செய்யுமாறு கலால் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் இறக்குமதி விபரத்தை தாக்கல் செய்ய கலால் துறைக்கு அதிரடி உத்தரவு
x
* தூத்துகுடியை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரின்ஸ் கார்டோசா என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டெர்லைட் தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

* அதில், ஸ்டெர்லைட் ஆலையால் நீர், காற்று மாசடைந்துள்ளதாகவும் வேதாந்தா நிறுவனம், தொடர்ந்து விதி மீறி செயல்படுவதாகவும் கூறி இருந்தார். 

* மேலும், தவறான தகவல்களை அளித்ததால், 2006ஆம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிடுமாறும் மனுவில் கூறியிருந்தார்.

* இந்த மனு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

* அப்போது,  ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018ம் ஆண்டு மார்ச் வரை இறக்குமதி செய்த மூலப் பொருட்களின் விபரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய கலால் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 12ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்