சர்வதேச டி20 போட்டியில் ரோஹித் புதிய சாதனை : அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடம்

சர்வதேச இருபது ஓவர் போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டியில் ரோஹித் புதிய சாதனை : அதிக சிக்சர்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதலிடம்
x
சர்வதேச இருபது ஓவர் போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ரோஹித் சர்மா படைத்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்சர்கள் விளாசினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார். தற்போது ரோஹித் சர்மா 107 சிக்சர்களுடன் முதலிடத்திலும், கிறிஸ் கெயில் 105 சிக்சர்களுடன் 2வது இடத்திலும், நியூசிலாந்து வீரர் கப்தில் 103 சிக்சர்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்