ஆஸி.க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி - சதம் விளாசினார் புஜாரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.
ஆஸி.க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி - சதம் விளாசினார் புஜாரா
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.   2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீர‌ர் புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 17 வது சத‌த்தை பூர்த்தி செய்தார்.  கேப்டன் விராட் கோலி 18 ரன்களில் சதத்தை தவறவிட்டார். ரோகித் சர்மாவும் தன் பங்கிற்கு 63 ரன்கள் சேர்க்க,  இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்துள்ளது.  இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி , 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்