"தேர்வை நடத்த இது சரியான நேரமா?" - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வினை நடத்துவதற்கு இது சரியான நேரமா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
x
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வினை நடத்துவதற்கு இது சரியான நேரமா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக சி.பி.எஸ்.இ. தேர்வுகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டிருக்க, அனைத்து இடர்களையும் எதிர்த்து நமது மருத்துவர்கள் போராடி கொண்டிருக்க, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு, இது நேரமா? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்