"பீதியை கிளப்பும் காங்கிரஸ் மூவர் அணியை தனிமைப்படுத்த வேண்டும்" - பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா கோரிக்கை

கொரோனா தொற்று பரவலால், நாடு தற்போது ஒரு நெருக்கடியான அவசர நிலையை சந்தித்து வருவதாக பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
பீதியை கிளப்பும் காங்கிரஸ் மூவர் அணியை தனிமைப்படுத்த வேண்டும் - பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா கோரிக்கை
x
கொரோனா தொற்று பரவலால், நாடு தற்போது ஒரு நெருக்கடியான அவசர நிலையை சந்தித்து வருவதாக பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டை 50 ஆண்டுகளாக ஆண்ட குடும்பத்தை சேர்ந்த 3 பேர், மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைமையை சாடியுள்ளார். அவர்கள் மக்களை தவறான பாதையில் வழிநடத்த முயலுவதுடன், அச்சத்தையும் ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் சர்மா, கொரோனா பரவல் ஒடுங்கும் வரை, அவர்கள் மூவரையும் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்