குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தொடங்கி வைத்தார்

குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் இருந்து டெல்லி​ ராஜ்காட்டுக்கு காந்தி சாந்தி பயணத்தை முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று தொடங்கி உள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி  பேரணி - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தொடங்கி வைத்தார்
x
மும்பை கேட்வே ஆப் இந்தியாவில் தொடங்கி வரும் 30 ஆம் தேதி காந்தி சமாதியில் முடிய உள்ள இந்த பிரச்சார பயணம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்கள் வழியாக செல்கிறது. யஷ்வந்த் சின்காவின் இந்த பிரச்சார பயணத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். குடியுரிமை சட்டத் திருத்தம் என்பது , அரசு உருவாக்கிய வன்முறை என யஷ்வந்த் சின்கா குற்றம்சாட்டி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்