"உள்ளூர் பொருட்களை வாங்க உறுதி ஏற்க வேண்டும்" - மனதின் குரல் உரையில் பிரதமர் பெருமிதம்

இந்தியாவை நவீனமயம் ஆக்குவதில் இன்றைய தலைமுறைக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
உள்ளூர் பொருட்களை வாங்க உறுதி ஏற்க வேண்டும் - மனதின் குரல் உரையில் பிரதமர் பெருமிதம்
x
60 வது மனதின் குரல் உரையில் பேசிய அவர், நாட்டின் முன்னேற்றத்திற்கு  21ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். இளைஞர்கள் ஒழுங்கினை விரும்புகிறார்கள் என்றும், அமைப்பு முறை சரியில்லை என்றால் தைரியமாக கேள்வி கேட்பதை தான் சிறப்பானதாக பார்ப்பதாக கூறினார்.  

வருகிற புத்தாண்டு காலத்தில் இளைஞர்கள் மட்டும் முன்னேற போவதில்லை என்றும்,  அவர்களின் திறமைகளால் நாட்டின் வளர்ச்சியும் மலர உள்ளதாக கூறினார். இந்தியாவை நவீனமயமாக்குவதில் இளைய தலைமுறை மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதாகவும் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சி இது என்றும்,  மீண்டும் 2020 இல் அனைவரும் சந்திப்போம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்